tamilnadu

img

இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு?

கொழும்பு, ஏப். 23-இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதி லடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு இணை அமைச்சர் ரூவன் விஜய வர்தனே செவ்வாயன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து இத்தாக்குதலை நடத்தியிருக் கின்றன என்று அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார். ஆனால் இதுதொடர்பாகமேற்கொண்டு எந்தவிதத் தக வலையும் அவர் அளிக்கவில்லை.பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறைஇணை அமைச்சரும், பிரதமருமேபாதுகாப்புக்குப் பொறுப்பான வர்கள். ஆனால், இத்தகைய தாக்குதல் நடக்க இருப்பது தொடர்பாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான (ராஜீய அமைச்சர்) தம்மிடமும், பிரதமரிடமும் பகிர்ந்துகொள்ளப் படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை அமைச்சர் ரூவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இதனிடையே ‘இஸ்லாமிய அரசு’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு (ஐ.எஸ். பயங்கர வாதக் குழு) இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தமது ஊடகப் பிரிவு மூலம் தெரிவித்துள்ளது.ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றி ருப்பதை சற்று கவனமாக அணுகவேண்டும் என்று இலங்கையில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறு கிறார். “வழக்கமாக தாக்குதல் நடந்த உடனே, தாக்குதல் நடத்தி யவரின் புகைப் படத்தை தமது ஊடகத் தளமான ‘அமாக்’கில் வெளியிட்டு பொறுப்பேற்பதே ஐ.எஸ். குழுவின் வழக்கம்” என்று அவர் கூறுகிறார்.தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிரியாவை சேர்ந்தவர் ஒருவரும் அடக்கம். உள்ளூர் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில்செவ்வாயன்று மதியம் நாடாளு மன்றம் கூடியது.அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல் லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாது காப்பு தேவை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.(பிபிசி)

;